Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமன்றி இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பழைய 5, 10 மற்றும் 100 ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதாக மட்டுமே ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் இவை செல்லாது என்று அர்த்தமில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுக்கள் செல்லும். இவற்றைத் திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி அவற்றுக்கு பதிலாக அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும். ஆகவே ரிசர்வ் வங்கி அறிவிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.

Categories

Tech |