இந்திய அஞ்சல் துறையானது மக்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். சிறுக சிறுக பணத்தை சேமிப்பதற்கு போஸ்ட் ஆபீஸ் திட்டம் சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். வங்கிக்கு நிகராக மக்கள் போஸ்ட் ஆபீஸிலும் பணத்தை சேமிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு திட்டம், கணக்கு தொடங்குதல், ஏடிஎம் கார்டு பெறுதல், பிபிஎஃப், என்எஸ்சி, என பல திட்டங்கள் சேவைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் இருக்கலாம். இனிமேல் இந்த சந்தேகங்களுக்கு நேரடியாக போஸ்ட் ஆபீஸ் செல்ல தேவையில்லை. தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொள்ளலாம். இதற்கு 18002666868 என்ற இலவச சேவை எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.