பிலிப்பைன்சில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது.
இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிலிப்பைன்ஸின் அதிபரான ரோட்ரிகா கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.