Categories
மாநில செய்திகள்

மக்களே! அடுத்த 3 நாட்களுக்கு – அலெர்ட் அலெர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக சென்னையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பைவிட கடலோர மாவட்டங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

உள் மாவட்டங்களில் 1 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, மதுரை, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |