Categories
தேசிய செய்திகள்

மக்களே…. அடுத்த 3 மாதங்களுக்கு உஷாரா இருங்க….. அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது, நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தால் கேரளாவில் கூட தற்போது குறைந்துவிட்டது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பண்டிகை காலங்கள் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது உஷாராக இருக்க வேண்டும்.

இதுவரை கிடைத்த பலனை யாரும் வீணாக்கி விடக்கூடாது. மக்கள் நெரிசலான இடங்கள் கொரோனா பரவுவதற்கு எளிதாகி விடுகிறது. அதனால் பண்டிகை காலங்களில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசியை செலுத்தி இருப்பது கட்டாயம். நாடு முழுவதிலும் முப்பத்தி நான்கு மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

Categories

Tech |