தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டம் போட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் கொடுத்துள்ளது. வாக்காளர்களின் அடையாள அட்டைகள், செல்போன்களை அதிமுக திரட்டுவதை தடுக்க வேண்டும் என்றும், கூகுள் பே போன்ற செயலிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது. கூகுள் பே போன்ற செயலிகள் மூலம் 2000 ரூபாய் வரை தரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.