பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உங்களது செல்போன் எண்ணிற்கு இணையதளம் மோசடி நபர்களால் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் மின்கட்டண தொகையை உடனே செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிட்டிருக்கும். மேலும் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறும், ஒரு லிங்கை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறும் மர்ம நபர்கள் கூறுவார்கள். அதனை நம்பி உங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட கூடாது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நேரடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று வேண்டிய தகவலை பெற்றுக் கொள்ளுங்கள். மோசடி நபர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Categories