கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் டோஸ்- ஐ போட்ட பலர் இரண்டாவது டோஸ் போட தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்த சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது