வடகிழக்கு பருவ மழையின் போது தான் தமிழகத்தில் ஆண்டின் அதிக மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். அதன்படி நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் மழை சற்று குறைந்து பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு சில இடங்களில் கனமழை அறிக்கையை நேற்று வானிலை மையம் வெளியிட்டது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.