Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்தியாவில் ஒரு வாரத்திற்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாகவும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று வாரங்களாக இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் ஒன்பது 9,195 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கொரோனா பாதிப்பு குறித்து புள்ளி விவரங்களை தெரிவிக்கும்ப Covid-19 India tracker ஐ வடிவமைத்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் ஒரு வாரத்திற்கு கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இந்த நிலை சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |