Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த அறிகுறி இருந்தா லேட் பண்ணாதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான்  வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளை பரிசோதனை செய்து விரைவாக தனிமைப்படுத்துவது வைரஸ் பரவலை தடுப்பதில் மிக முக்கியமானது.

மேலும் காய்ச்சலுடன் தலைவலி, தொண்டை வலி, மூச்சுத் திணறல், உடல் வலி சுவை, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் நபர் அல்லது காய்ச்சலுடன் இந்த அறிகுறிகள் இல்லாமலேயே இருந்தாலும் சந்தேகிக்கப்படும் நபராக கருதி உடனே தனிமைப் படுத்தப்பட வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர 5 முதல் 8 மணி நேரம் ஆகும் என்பதால், நோய்த்தொற்றை உறுதிப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் ஆன்டிஜென் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

24 மணி நேர அடிப்படையில் பல ஆர்.ஒ.டி சோதனை மையங்கள் அமைக்கவும், அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆர்.ஏ.டி சோதனையை அனுமதிக்கவேண்டும் தேவையான பரிசோதனை உபகரணங்களை வாங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |