தென்மேற்கு வங்ககடலை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக ,புதுவை, காரைக்கால் பகுதியில் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுலுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம், புதுச்சேரி கடற்கரை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நவம்பர் 14 ஆம் தேதி வரை கணமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.