தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.