நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசடி செய்பவர்கள் நிர்வாகிகளாக பேசி பயனர்களின் வங்கி கணக்குகளை அணுக முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ஒரு சைபர் கிரிமினல் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகியாக பேசி KYC படிவத்தை புதுப்பிக்கும் சாக்கில் வாடிக்கையாளரை அழைத்ததாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதனை நம்பி வாடிக்கையாளர் தனது வங்கி விபரங்களை தவறுதலாக கொடுத்தபோது மோசடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியது. எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம்.
ஏர்டெல் ஒருபோதும் 10 இலக்க மொபைல் எண்ணில் இருந்து உங்கள் அக்கவுண்ட் மற்றும் சிம் அப்டேட்டிற்காக எந்த ஒரு KYC தொடர்பான எஸ்எம்எஸ் அனுப்புவது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் எச்சரிக்கையாக இருங்கள் எனவும், அழைப்பில் எந்த ஒரு ஓடிபி-யை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகுங்கள்.