Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே அலர்ட்… இன்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்று இரவு முதல் குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது தற்போது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன்படுத்துகிறார்கள். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே வீடியோ கால், குரூப் கால் என பேசிக் கொள்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது.

இந்நிலையில் iOS 9 மற்றும் ஆண்ட்ராய்டு 4.0.3 ஆகியவற்றுக்கு குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அந்த இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன் பயனாளிகள் உடனடியாக தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இயங்குதளத்தை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்போதுள்ள இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாட்ஸ்அப் பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |