Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. கரையை நெருங்குகிறது ஜவாத் புயல்…. தயார் நிலையில் மீட்பு படை….!!!!

தெற்கு அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்றுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த மண்டலம் வங்கக் கடலில் நிலை கொண்டு இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலால் பாதிப்பு ஏற்படும் ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 64 குழுக்கள் பணியமர்த்தப்படுகின்றன.

ஏற்கனவே பாதிக்கப்படும் மாநிலங்களில் 46 குழுவினர் முகாமிட்டு உள்ளதாகவும், 18 படையினர் எந்தநேரமும் அங்கு செல்ல தயார் நிலையில் இருக்கின்றன என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் அப்துல் கர்வால் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் உள்ளனர் என்றும் அவர்களிடம் கம்பம் வெட்டும் கருவிகள், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் மின்சார கம்பங்கள் மற்றும் ரப்பர் படகுகள் ஆகிய மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |