இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா விதிகளை மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி முகக் கவசம் அணியாமல் சென்றால் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ச்சியாக முக கவசம் அணியாமல் தொடர்ந்து கொரோனா விதிகளை மீறினால் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப்போலவே பொது இடத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தனது வீட்டிற்கு வெளியே எச்சில் துப்புவது கூட குற்றச் செயல் என்றும் அதற்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.