Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்… சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். தடுப்பூசி போடுவதால் பக்க விளைவுகள் எதுவும் வராது. சென்னையில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பு ஊசி போடுவது அவசியமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |