ஊட்டியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் இயற்கை எழிலுக்கு பஞ்சமே இருக்காது. அங்குள்ள இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் எதையும் ஊட்டி மலைப் பகுதிக்குள் எடுத்து செல்ல கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊட்டிக்கு ஒரு முறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்தால் அபராதம் விதிப்பது தொடர்பாக கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஏற்கனவே நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்கப்படுவது இல்லை. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்ய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அபராதம் விதிப்பது தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதிக்குள் அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.