Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் மீண்டும்…. வானிலை மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும். மேலும் பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |