Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகம் முழுவதும் மீண்டும்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பேருந்துகள் போன்ற பொது இடங்களில் மக்கள் செல்ல 100% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையான முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் கொரோனா தொற்று முற்றிலும் நம்மை விட்டு விலகவில்லை.  தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதில் சென்னை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இந்த மாவட்டங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |