தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.