வட கொரியாவில் கடந்த மாதம் 8ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இருப்பினும் அந்நாட்டு அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரம்பரிய முறைகளை பின்பற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டில் இருந்து வெற்றிகரமாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு விட்டது என்று சமீபத்தில் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல மீண்டும் பரவுவதை தடுக்கவும், குரங்கு அம்மை உள்ளிட்ட தொற்று நோய் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பதற்கும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து அவசரகால தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா முழுவதும் தண்ணீரில் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது. மக்கள் காட்டு விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா வைரஸ் மற்றும் குரங்கு அம்மை போன்ற நோய்களை கண்டறிய உதவக்கூடிய வகையில் ஒரு சிறப்பு சோதனை அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.