நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இலவச உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளோடு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற ஏராளமான திட்டங்கள் அமலில் உள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிதி அமைச்சகம் சார்பாக 30,628ரூபாய் நிதி உதவி வழங்கப் படுவதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க லிங்க் ஒன்றும் பரப்பப்படுகிறது. இது உண்மையானதா இல்லையா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்நிலையில் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. PIB சார்பாக இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பில் இது ஒரு போலியான தகவல் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மத்திய நிதி அமைச்சகம் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த வில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க https://bit.ly/3P7CIPY என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்று வரும் செய்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற போலியான செய்திகளை பரப்பினால் அதனை எப்படி கண்டுபிடிப்பது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதுபோன்ற நம்பகத்தன்மையற்ற செய்திகளைப் பார்த்தால் அதை https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இல்லை என்றால் 8799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம். [email protected] என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் மக்கள் இது போன்ற போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.