தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் பின்னர் மழை படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 2-ம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.