Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்….. வங்கியில் காணாமல் போகின்ற பணம்…. ஆய்வில் கடும் எச்சரிக்கை…. !!!!

நாடு முழுவதும் வங்கி மோசடி என்பது ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு பக்கம் வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கடனாக வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றுபவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மறுபக்கம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மோசடிகளும், ஏடிஎம் மோசடிகளும், இப்போது உள்ள காலகட்டத்தில் பெரும் பிரச்சனையாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கை விடுத்தாலும், மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து மோசடிகள் நடந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கை விடுத்தாலும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மோசடிகளுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது. தொழில்நுட்பம் மூலம் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் கூட அதை வைத்து திருடும் கும்பல் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் ஏராளமானோர் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். மேலும் வங்கி சேவைகளை அதிகமாக ஆன்லைன் மூலமாகவே செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 2 ஆண்டுகளுக்கு வங்கி மோசடிகள் அதிகமாக இருக்கும் என்று ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |