மும்பையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளுடன் ஒமைக்ரான், ப்ளூமைக்ரான் போன்ற கொரோனா செய்திகளும், பொதுமக்கள் 3-வது அலை தொடர்பான செய்திகளும், மக்களை பீதியில் வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் ஒமைக்ரான் 3-வது அலை எழுந்தால், கட்டாயம் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது. அந்த வரிசையில் 3-வது அலையின் போது 80 லட்சம் கொரோனா பாதிப்புகளும், 80,000 பலிகளும் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ் பேசுகையில், 3-வது அலையின் போது சுமார் 80,00,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகும் அபாயம் உள்ளது. இதில் 1% என்றாலும் கூட, சுமார் 80,000 மரணங்கள் நிகழலாம். 3-வது அலை ஏற்பட்டாலும் அது லேசான அறிகுறி தென்படும். பலி எண்ணிக்கை இருக்காது என்று ஏனோ தானோவென்று இருந்துவிட வேண்டாம் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.