நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா முதல், இரண்டாவது பேரலையால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம், இந்த முறை டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள போதும் கட்டுப்பாடுடனே இருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா பரவல் 3 வாரங்களுக்குள் உச்சத்தை எட்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தினசரி பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால் 3 வாரத்தில் அது மிகவும் வேகமாக பரவி விடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.