Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்….. 4 நாட்கள் வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வரும் நான்கு நாட்கள் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும். மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகின்ற 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும்.

மேலும் வட மாநிலங்களில் வருகின்ற நாட்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனைப்போலவே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |