பல வருடங்களுக்கு முன்னால் வரை ஏசி என்பது வீட்டுக்குத் தேவைப்படும் ஆடம்பரமான பொருள்களில் ஒன்றாக இருந்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே காணப்பட்ட ஏசி தற்போது சாதாரண வீடுகளிலும் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வீடுகளில் ஏசியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.அறையை குளிர்விக்க பயன்படுத்தப்படும் இயேசு ஆனதே சில நேரங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது. ஏசி சாதனங்கள் வெடித்து உயிர் இழப்புகள் ஏற்படும் நிகழ்வுகளும் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதற்கு முக்கிய காரணம் ஏசி இயந்திரத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு ஏசியின் கண்டன்ஸரில் உருவாகும் அதீத வெப்பம் அல்லது கம்ப்ரஸரில் உருவாகும் அதீத அழுத்தம் தீப்பிடிக்க ஒரு காரணமாக இருக்கலாம். குறிப்பாக ஏசியில் தூசி அதிகம் சேர்ப்பது,மின்சார பழுதுகள் மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் தான் வெடித்து தீ விபத்து நேர முக்கிய காரணமாகும். கண்டன்சர் காயிலில் தூசிகள் அதிகம் சேர்வதால் வெப்பம் வெளியேற முடியாமல் அளவுக்கதிகமாக சூடாகிறது. மட்டமான வயரிங், பிளாக் பயன்பாடு, பழைய வயர்கள் பயன்படுத்தப்படுவது, வோல்டேஜ் ஏற்ற இறக்கம், ஏசிக்கு உரிய கேஸ் வகைகளை பயன்படுத்தாமல் தவறான கேஸ் பயன்படுத்துவது போன்ற தவறுகளால் தீ விபத்து ஏற்படுகிறது.
மேலும் ஏர் பில்டர்களை எப்போதும் சுத்தமாக பராமரிக்கவும். இதனால் காற்று உறிஞ்சப்படுவது எளிதாகும். வெயிலில் இருக்கும் விண்டோ யூனிட் சற்றே குனிந்த நிலையில் இருந்தால் கண்டன்சர் தண்ணீர் எளிதாக வெளியாகும். மின்சார லோட் தாங்காத எக்ஸ்டென்ஷன் கார்டை பயன்படுத்த கூடாது. இடி இடிக்கும் போது ஏசி இணைப்பை துண்டிக்கவும். இது போன்றவற்றை பின்பற்றினால் ஏசி தீ பிடிக்காமல் தவிர்க்கலாம்.