“கூகுள் பே”, ‘போன் பே’ மூலம் பணம் செலுத்தும் போது இனி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருப்பூரில் துரைசாமி என்பவரின் தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர் QR code மூலம் பணம் செலுத்த ஸ்கேன் செய்தபோது அதில் வேறு ஒருவர் பெயர் வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த துரைசாமி QR code-ஐ கவனித்த போது தனது QR code மீது வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் அனைவரும் “போன் பே”, “கூகுள் பே” மூலம் பணம் செலுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.