தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் அச்சம்நிலவி வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் இன்று முதல் முகக்கவசம் இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் முக கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.