Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட்!…. கடன் வாங்காதவர்களையும் தொல்லை பண்றாங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சுமார் 2 வருடங்களுக்கு முன் கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் உடனடி கடன் எனும் பெயரில் சீனசெயலிகள் நுழைந்தது. இந்த சட்டவிரோத கடன் செயலிகளின் தொல்லையால் பலர் தங்களது உயிரைக் இழக்க வேண்டி இருந்தது. மேலும் பலர் பன்மடங்கு பணத்தைக் கொடுத்து கடன் வலையில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில் கடன் செயலிகளின் மிரட்டல்கள் சிறிது நாட்களுக்கு காணாமல் போயிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் சீனகடன் செயலிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் இந்த முறை அவை முன்பைவிட ஆபத்தான முறையில் திரும்பி வந்துள்ளது.

அதாவது இப்போது தங்களிடம் கடன் வாங்காதவர்களையும் சிக்கவைக்கிறார்கள். நாட்டின் பல நகரங்களிலிருந்து இது போன்ற எண்ணற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது. அவர்களது வலையில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை இன்று நாங்கள் கூறுவோம். இந்த போலி கடன் செயலிகளின் நபர்கள், அவர்களிடம் கடன் வாங்காதவர்களையும் தங்களது செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்களையும் கூட ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். கடன் வாங்காதபோது எவ்வாறு டார்ச்சர் செய்யப்படுகிறார்கள்? என நீங்கள் நினைக்கலாம். அதற்கு அவர்கள் கையிலெடுக்கும் புத்திசாலித்தனமான செயல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மோசடி செய்பவர்கள் முதலில் வெவ்வேறு ஏஜென்சிகளிடம் இருந்து பல மொபைல் எண்களைத் திருடுகின்றனர். இந்த எண்களில் செலுத்தவேண்டிய பணம் பற்றிய வாட்ஸ்அப் செய்திகள் ஒவ்வொன்றாக பதிவிடப்படுகிறது. அத்துடன் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஒரு இணைப்பு கொடுக்கப்படுகிறது. நீங்கள் ஆர்வத்துடன் இணைப்பைக் கிளிக் செய்தீர்கள் எனில் மோசடி செய்பவர்களின் வலையில் விழுந்துவிடுவீர்கள். ஆகவே இப்படிதான் மோசடி நபர்களின் வலையில் விழுகிறார்கள். இதில் விழுந்தவர்களை முதலில் தொலைபேசி வாயிலாக மிரட்டத் தொடங்குகிறார்கள். அப்போதும் பணம் கிடைக்கவில்லை எனில் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். அப்படியும் பணம் வரவில்லை எனில் ஆபாசமாக போட்டோவை வைரலாக்கி விடுகிறார்கள்.

கவனமாக இருக்க செய்யவேண்டியவை என்ன?… 

இவ்வகையான மோசடியைத் தவிர்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உதவிக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.

#முதலில் இவ்வகையான உடனடிகடன் பயன்பாட்டில் பணம் எடுக்காமல் இருப்பது நல்லது. அதன்பின் அவர்களுக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் இருக்க முயற்சிசெய்யுங்கள்.

# நீங்கள் எவ்விதமான கடனும் வாங்கவில்லை எனில் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் இந்த நிறுவனங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல.

# ஆகவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. சட்ட நடவடிக்கையைத் தவிர்த்து வேறு எந்தச் செயலுக்கும் பயப்படவேண்டாம்.

# மோசடி லிங்குகளை தவிர்ப்பது நல்லது. அதை உங்கள் மொபைலிலிருந்து டெலிட் செய்து விடுங்கள். அந்த லிங்கை கிளிக் செய்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆபத்துகள் வரத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |