Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்!…. மருத்துவர் போல் நாடகமாடி தம்பதியினர் மோசடி…. எவ்வளவு ரூபாய் தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்மநபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து  வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த சங்கரநாராயணனின் மனைவி ஜமுனா (47). இவர் குமரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார்மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது “எனக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். என் கணவர் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் வில்லுக்குறி குதிரை பந்தவிளை பகுதியை சோ்ந்த ராம்குமார் (29) மற்றும் அவரது மனைவி நிஷா வருணி (26) போன்றோர் எனது வீட்டின் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதனால் எனக்கு அவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. அதில் ராம்குமார் ரயில்வே அதிகாரி எனவும் அவரது மனைவி நிஷா வருணி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் தனக்கு ரயில்வே துறையில் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர் தெரியும் எனவும் அவர்கள் வாயிலாக ரயில்வே துறையில் பலரை வேலைக்கு சேர்த்துள்ளதாகவும் ராம்குமார் கூறினார். அதுமட்டுமின்றி உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாங்கி தருவதாகவும், அதற்கு ரூபாய்.4 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். அதன்பின் என் உறவினர் ஒருவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூபாய்.4 லட்சம் வாங்கினார். ஆனால் கூறியபடி அவர் வேலைவாங்கி தராமல் காலம் கடத்தி வந்தார். இதுகுறித்து  அவரிடம் கேட்டபோது, ரயில்வேயில் குழுவாக தான் வேலைக்கு எடுப்பதாகவும், இதனால் மேலும் சிலரை அழைத்து வரும்படியும் ராம்குமார் என்னிடம் கூறினார். அதுபோன்று அழைத்து வரும் ஒவ்வொருவரிடமும் ரூபாய்.4 லட்சம் பெற்றுதர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதன் காரணமாக உறவினர் உட்பட 23 பேரிடமிருந்து தலா ரூபாய்.4 லட்சம் வீதம் ரூ.92 லட்சம் வாங்கி கொடுத்தேன். எனினும் அவர் கூறியதுபோல 23 பேருக்கும் வேலை வாங்கி தரவில்லை. இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அதன்பிறகுதான் அவர்கள் ஏமாற்றி பண மோசடி செய்தது தெரியவந்தது. இது பற்றி ராம்குமார், அவருக்கு உடைந்தையாக இருந்த மனைவி இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை பெற்றுதர வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ராம்குமார், நிஷா வருணி போன்றோர் மீது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று நாகர்கோவிலில் வைத்து ராம்குமார், நிஷா வருணி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்ட தகவல்கள் வெளியாகியது. அதாவது கணவன்-மனைவி இருவரும் மருத்துவத்துறை, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். கன்னியாகுமரி மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இந்த தம்பதி போலி மருத்துவராகவும், ரயில்வே அதிகாரியாகவும் உலாவந்து பண மோசடியில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் ராம்குமார், மருத்துவர் எனக்கூறி சிறுமி உள்ளிட்ட சிலருக்கு சிகிச்சையளித்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. ரூபாய்.92 லட்சம் மோசடி செய்ததாக ராம்குமார்-நிஷாவருணி தம்பதியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Categories

Tech |