Categories
உலக செய்திகள்

மக்களே அலர்ட்…. அடுத்த புதிய வைரஸ்…. யாருக்கெல்லாம் அதிக ஆபத்து தெரியுமா?….!!!

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்தது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவில் ஒமிக்ரான் புதிய பாதிப்புகளில் 73% அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெல்மைக்ரான் தொற்று ‘மினி சுனாமி’ போன்று வேகமாக பரவி வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய இரண்டு ஸ்பைக் புரதங்களை கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் மிகவும் பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம், மூத்த குடிமக்கள் மற்றும் பல்வேறு இணைய நோய் இருப்பவர்கள் டெல்ஒமைக்ரான் தாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பகுதிகளிலும் டெல்மைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுக்கு ஏற்பட்ட அதே அறிகுறிகளை டெல்ஒமைக்ரான்க்கும் தென்படும் என்று கூறப்படுகிறது. அதாவது அதிகப்படியான உடல் வெப்பநிலை, இருமல், சுவை மற்றும் வாசனை அறியாமை, தலைவலி, சளி ஒழுகுதல் மற்றும் தொண்டை ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில அரசின் கோவிட் செயல்பாட்டு குழு உறுப்பினர் சஷாங்க் ஜோஷி கூறியது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தான் மிகப் பெரியதாகக் காணப்பட்டது. இது குறைந்து வந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இதன் தீவிரம் மற்றும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று இதுவரை கண்டறியப்படவில்லை. அதன்படி டெல்மைக்ரான் பாதிப்பையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதுதொடர்பான விரிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. மும்பை மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90% கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பெரிய சமூகம் ஒன்று உருவாகி உள்ளது. இது புதிய வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவ நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் புதிய வைரஸ்கள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் கிடைத்தால்தான் சரியான நிலைப்பாட்டுக்கு வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |