தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம். மேலும் அனைவரும் தவறாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவால் விரட்டியடிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. மக்களை வீட்டில் இருக்கும்படி பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் காமெடி நடிகர் கவுண்டமணி மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதன்படி கொரோனா ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் பார்க்கிறேன். தயவுசெய்து மக்கள் உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசர நிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள். நம் அனைவரையும் நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.