நூல் விலை உயர்வை சமாளிப்பதற்காக பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தீர்மானம் செய்து உள்ளனர்.
நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலை 15 சதவீதம் உயர்ந்த உள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பருத்தி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றம் அடைந்து வருகின்றது. தற்போது கேண்டி 400 முதல் 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு தொழில் துறை சார்பில் கடிதம் அனுப்பபட்டும், நேரில் சென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதமும் நூல் விலை 40 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கும் சூழ்நிலையில் தென்னிந்திய உற்பத்தியாளர் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நூல் விலை ஏற்றத்தின் காரணமாக பின்னலாடை உற்பத்தி தொழில் மூலம் கூடிய சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு, தற்போது விலையை 15 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, ஏற்றுமதியை தடை செய்து உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க இருப்பதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.