Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ஆதார் கார்டு – பான் கார்டு எப்படி இணைப்பது?…. வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைந்தவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும்.

ஆதார் கார்டுடன் பான் கார்டு எப்படி இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.
அதில் LINK Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
பான் இணைப்பு பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதாரில் இருந்து வரும்.

உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லை என்றால் இவ்வாறு உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக்கொள்ளலாம்.

Categories

Tech |