இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக, உங்கள் வீட்டில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
ஆதார் கார்டு குறித்த சந்தேகங்களுக்கு 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் தீர்வு காணலாம். உங்கள் மொபைல் அல்லது லேண்ட்லைனில் இருந்து 1947 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் உங்கள் அருகிலுள்ள ஆதார் கேந்திராவை அல்லது அந்த பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் முகவரி போன்ற விவரங்களை நீங்கள் கண்டறியலாம். அல்லது MAadhaar App பயன்படுத்தியும் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு கண்டறியலாம் என்று யுஐடிஏஐ கூறியுள்ளது.
இந்த ஹெல்ப்லைன் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 12 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது. இந்த சேவை வாரத்தில் திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் ஆதார் குறித்த சந்தேகங்களுக்கு இனி 1947 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.