Categories
தேசிய செய்திகள்

மக்களே…! ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு…. இந்திய தேர்தல் ஆணையம் மிக முக்கிய தகவல்…!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் சுகில் சந்திராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுகில் சந்திரா, கொரோனா காலகட்டத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் மற்றும் பல்வேறு இடைத் தேர்தலை நடத்துவது பெரும் சவாலாக அமைந்தது.

நான் தேர்தல் ஆணையராக இருந்த சமயத்தில் இரண்டு முக்கிய தேர்தல் திருத்தங்கள்18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு ஆண்டிற்கு ஒருநாள் என்பதற்கு பதிலாக வாக்காளர்களாக சேர்ப்பதற்கு ஒரு வருடத்தில் 4 தேதிகளில் வழங்குதல் மற்றும் வாக்காளர் பட்டியல் நகல் உள்ளீடுகளை சரிபார்க்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது இந்த இரண்டு முக்கிய தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ன. இதுகடந்த 20 வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஜனவரி 2 அல்லது அதற்குப்பிறகு 18 வயது முடிவடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் நகல் உள்ளீடுகள் சரிபார்ப்பதற்கு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தேர்தல் எப்போது நடைபெறும் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்களில் விவரங்கள் போன்ற கூடுதல் சேவைகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்க முடியும்.எனவே வாக்காளர் பட்டியலில ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |