Categories
மாநில செய்திகள்

மக்களே ஆன்லைனில் உஷார்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை பதிவு…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போது சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் தினமும் புதிது புதிதாக நடக்கின்றன. அதனால் போலீசார் தரப்பில் விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் சைபர் கிரைம் சார்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், மக்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை யாரும் நம்ப வேண்டாம். உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வரும் தவறான லிங்க்குகள் எதையும் இணைப்பில் சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இணையத்தில் பகிரப்படும் கவர்ச்சிகரமான வர்த்தக தள்ளுபடி களை நம்பி ஏமாற வேண்டாம். நீங்கள் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் போது யாராவது உங்களுக்கு தானாக வந்து உதவி செய்வதாக கூறினால் மறுத்து விடவும். கஸ்டமர் கேர் எண்களை, கூகுளில் தேடும்போது மிக கவனம் தேவை. தவறான எண்களை தொடர்பு கொள்வதன் மூலமாக ஏமாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஓஎல்எக்ஸ் மூலமாக ராணுவத்தில் பணியாற்றுவதாக கூறிய பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். ஆன்லைன் மூலம் பழக்கம், அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் மூலமாக பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு நீண்ட நேரமாக நெட்வர்க் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் வங்கிக் கணக்கை முடக்கி கொள்வது மிக நல்லது. உங்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் பெயரில் போலி முகநூல் கணக்குகள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாக அவசர தேவைக்கு பணம் கேட்டால் கவனம் தேவை.

மேலும் உங்கள் நிலத்தில் மொபைல் டவர் அமைக்க உள்ளோம் என்று யாராவது கூறினால் அதையும் நம்ப வேண்டாம். ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட இதர வங்கி தகவல்களை யாருக்கும் பகிர கூடாது. இதுதொடர்பான புகார்கள் ஏதாவது இருந்தால் http://cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் மக்கள் தெரிவிக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |