Categories
பல்சுவை

மக்களே…..! ஆன்லைன்ல மருந்து வாங்குறீங்களா….? அப்ப இந்த விஷயத்தை எல்லாம் கவனமா செய்யுங்க….!!!

ஆன்லைனில் மருந்து வாங்கும் போது நாம் செய்யும் சில தவறுகளால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இன்றைய அளவில் மக்கள் அனைவரும் ஆன்லைனிலேயே மருந்துகளை அதிக அளவில் வாங்கி வருகின்றன. அப்படி நாம் ஆன்லைனில் மருந்து வாங்கும் போது சில தவறுகளை செய்கிறோம். அந்த தவறான மருந்து உங்களுக்கு வந்து சேரும் போது அது ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஆன்லைனில் மருந்துகளை வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இணையதளத்தை தேர்ந்தெடுப்பது:

ஆன்லைனில் மருந்து வாங்கும் போது முதலில் நம்பகமான இணையதளத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால் போலி மருந்து வாங்குவதை தவிர்க்க முடியும். போலி மருந்துகளை தவிர்ப்பதே சிறந்த வழி.

சேவை உடன் பேசவேண்டும்:

ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்வதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் சேவை நிறுவனத்துடன் பேச வேண்டும். அப்படி பேசும் போது ஆன்லைனில் மருந்து வாங்குவது பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும்.

மருத்துவரிடம் காட்ட வேண்டும் :

ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யும்போது கண்டிப்பாக இந்த மருந்தை உங்கள் மருத்துவரிடம் காட்டுவது நல்லது. அவர் உங்களுக்கு சரியான மருந்து கிடைத்ததா? இல்லையா? என்பதை கிராஸ் செக் செய்து கொண்டால் தவறான மருந்தை நீங்கள் சாப்பிடாமல் தப்பிக்க முடியும்.

பில் வாங்க வேண்டும்:

உங்களுக்கு மருந்து கொண்டுவருபவரிடம் சரியான பில்லை கேட்டு பெற வேண்டும். நீங்கள் ஆர்டர் செய்த மருந்துகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இது வழங்கும். ஏனெனில் மருந்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் அந்த நிறுவனத்திற்கு எதிராக புகார் செய்வதற்கு இந்த பில் உதவியாக இருக்கும்.

Categories

Tech |