Categories
உலக செய்திகள்

மக்களே ஆபத்து…! சீனா தானத்தை சாப்பிடாதிங்க… ஏன்னா அதுல…? குற்றம் சாட்டிய கட்சி…!!

சீனா நன்கொடையாக 1 மில்லியன் அரிசியை வழங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சி இது தொடர்பாக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளது.

சீன அரசு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த அரிசி வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங் கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மேல் குறிப்பிட்டுள்ள தகவல் தொடர்பாக அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதாவது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை இலங்கை மக்களுக்கு கொடுத்தால் அந்நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏனெனில் சீனா அதிக மகசூலை பெற வேண்டி ரசாயன உரங்கள் அளவுக்கதிகமாக பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு மக்களிடையே பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது.

Categories

Tech |