இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் ஜிஎஸ்டி வரியில் நான்கு வகையான வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அவை ஒன்றிய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி ஆகும். அதனைத் தொடர்ந்து பொருட்களை வாங்கும் போது சரக்கு மற்றும் சேவை வரிக்கான பில் ரசிதுகளை பொதுமக்கள் கேட்டு வாங்குமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. அதாவது கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான பில்லையும் பொதுமக்கள் கேட்டு பெற்றால் மட்டுமே அரசுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் முழுமையாக கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் ரசீதை கேட்டு பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக எனது “பில் எனது உரிமை” என்ற திட்டத்திற்கான ஒன்றை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் பெரும் ஜிஎஸ்டி வரியுடன் கூடிய பில்லின் நகலை வணிகவரித்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அவ்வாறு பதவியேற்றம் செய்யும் வாடிக்கையாளர்களை குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.