தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அன்றாடம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் 75 ரூபாய் உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்.