Categories
அரசியல்

மக்களே…! இது குப்பை தேர்தல்…. பாடம் புகட்டவிட்டால் அல்வா கிண்டிருவாங்க…. செல்லூர் ராஜு…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மதுரை மாவட்டத்தில் 43 வது வார்டில் போட்டியிடும் கண்ணன் என்பவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த தேர்தல் ஒரு குப்பை தேர்தல் திமுக ஆட்சியை ஒழித்துக்கட்ட மக்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பு. சாக்கடையில் ஓடும் கழிவுகளை நீர்மூலம் பீச்சியடிக்க இந்த தேர்தல் சிறந்த வழி வகை செய்துள்ளது. எனவே மக்கள் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தேர்தலில் மக்கள் திமுகவுக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட வேண்டும் இல்லையேல் அவர்கள் நமக்கு அல்வா கிண்டி கொடுத்துவிடுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |