நாடு முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகிறது. இந்த சிலிண்டர் விலையானது எரிபொரு விலையேற்றத்தின் காரணமாக படிப்படியாக உயர தொடங்கியது. இதனால் மத்திய அரசு சிலிண்டர்களுக்கான மானியத்தை வழங்க திட்டமிட்டு வருகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான கூடுதல் எடை கொண்ட சிலிண்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிக சிலிண்டர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முன்னதாக 200 அல்லது 300 க்கு தள்ளுபடி வழங்கி வந்த நிலையில் விநியோகிஸ்தர்கள் வணிகச் சிலிண்டர்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக பலமுறை புகார் எழுந்தது. இதனால் வணிக சிலிண்டர்களுக்கான தள்ளுபடி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நவம்பர் 8ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அனைத்து எடையும் உள்ள வணிக சிலிண்டர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.