தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைக்கவும், கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.