மூன்றாம் தரப்பு ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைப்பதில் கவனம் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுவிட்டோம். இதில் விளையாடுவதற்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் ப்ளே ஸ்டோரில் இருந்து பல்வேறு ஆப்புகளை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு பலரும் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகிறோம்.
அதிலும் குறிப்பாக முன்பின் தெரியாத யாரோ வடிவமைத்த ஸ்கேனர் செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். இந்த மூன்றாம் தரப்பு செயல்கள் உங்கள் போனில் செயல்திறனை பாதிக்கலாம் அல்லது உங்கள் போனில் உள்ள போனின் ஸ்டோரேஜில் உள்ள தரவுகளை சேகரிக்கலாம். செயலி தேர்வில் கவனம் தேவை.