Categories
மாநில செய்திகள்

மக்களே இதை கட்டாயம் பாருங்க…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

வெளியில் சென்றால் கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாஸ்க் அணியும்போது  மூக்கு, வாய் இரண்டையும் மூடி இருக்குமாறு போட வேண்டும். சிலர் மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை போடுகிறார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும்போது இரண்டு முக கவசங்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பேருந்துகளில் செல்லும் போதும், கடைகளுக்கு செல்லும்போதும், அலுவலகங்களுக்குச் செல்லும் போதும் இரண்டு மாஸ்க் அணிவது நல்லது. கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். இதை விட மிகவும் முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்வது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்கவும், மீட்கவும் மிகமுக்கிய கவசம் தடுப்பூசி தான் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |